ஜூலை மாதம் நாடே ஸ்தம்பிக்கும் அளவில் வேலை நிறுத்த போராட்டம்- கோவையில் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழு அறிவிப்பு…

கோவை: ஜூலை 9ஆம் தேதி நாடே ஸ்தம்பிக்கும் அளவில் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் நடத்துவதற்கு அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் முடிவெடுத்துள்ளனர்…

அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைகள் குழுவின் சார்பில் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்ற நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட குழுவின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் LPF , INTUC, AITUC, CITU, HMS, MLF, UTUC, LLF பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் புதிய சட்ட தொகுப்புகள் நான்கையும் திரும்ப பெற வேண்டும், குறைந்தபட்ச மாத ஊதியமாக 26,000 நிர்ணயம் செய்ய வேண்டும், 8வது ஊதிய குழுவை விரைவில் அமைத்திட வேண்டும், பத்தாண்டுகளாக கூட்டப்படாமல் இருக்கும் இந்திய தொழிலாளர் மாநாட்டை உடனடியாக கூட்ட வேண்டும், பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு மீதான கலால் வரியை நீக்க வேண்டும், புலம்பெயர் தொழிலாளர்களுக்கான தேசிய கொள்கைகளை உருவாக்க வேண்டும் இந்தியா முழுவதும் உள்ள 23 NTC ஆலைகளையும் இயக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மேலும் ஜூலை 9ஆம் தேதி 24 மணி நேரம் இந்திய நாடே ஸ்தம்பிக்கும் வகையில் ரயில்கள், ஆட்டோக்கள், பேருந்துகள், தொழிற்சாலைகள், விமானங்கள் இயங்காத வகையில் வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Recent News

Latest Articles