கோவை: நவராத்திரி விழாவை முன்னிட்டு கோவையில் வட மாநில ஆண்கள், பெண்கள் வண்ணமயமான உடை அணிந்து தாண்டியா நடனம் ஆடியது காண்பவரே கவர்ந்தது.
நவராத்திரி விழா துவங்கி அடுத்த மாதம் 2 ம் தேதி முடிவு அடைகிறது. இந்த விழாவில் மக்கள் விரதம் இருந்து கலாசார நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் செய்கின்றனர்.
வீடுகளில் கொலு பொம்மை வைத்து வழிபடுகின்றனர். இதனை வரவேற்கும் விதமாக கோவை குஜராத் சமாஜில் பாரம்பரிய நடனமான தாண்டியா நடன நிகழ்ச்சி நடந்தது.
இதில், ஏராளமான வட மாநில ஆண்கள், பெண்கள் புத்தாடைகள் அணிந்து தாண்டியா நடனம் ஆடி நவராத்திரி விழாவை வரவேற்றனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், நவராத்திரி விழாவை முன்னிட்டு கோவையில் 9 வது ஆண்டாக தாண்டியா நடனம் நடைபெற்றது. இது வட இந்திய கலாசாரத்துடன் கூடிய தாண்டியா குச்சிகளுடன் ஆடக் கூடிய ஒரு பாரம்பரிய நடனம் ஆகும் என்றனர்.