கோவை: NCC செய்தி வெளியிட்ட சில மணி நேரங்களில் இருகூரில் தேங்கிக்கிடந்த குப்பைகள் முழுமையாக அகற்றப்பட்டன.
இருகூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கே.ஜி போஸ் நகர் எக்ஸ்டென்ஷனில் பல நாட்களாக சாலை ஓரம் குப்பைகள் தேங்கிக்கிடந்தன.
இதன் அருகில் பள்ளி செயல்பட்டு வரும் நிலையில் குப்பைகள் சாலையெங்கும் பரவியதால், அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகளும், மாணவர்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.
இது குறித்து News Clouds Coimbatore வாசகர் பிரபு வாசுதேவன் நமக்கு வீடியோ மற்றும் புகைப்படங்களுடன் தகவல் அளித்தார்.
தகவலின் அடிப்படையில், “இது இருகூரா? இல்லை குப்பைத் தொட்டியா?” என்ற தலைப்பில் News Clouds Coimbatore செய்தி வெளியிட்டது.
மேலும், இந்த தகவல் மாவட்ட ஆட்சியர் பவன் குமாரிடமும் கொண்டு செல்லப்பட்டது.
தகவல் கிடைத்த அடுத்த நிமிடமே அங்கு பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
ஆட்சியரின் உத்தரவின் பேரில் ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன், தூய்மை பணியாளர்கள் குழு களமிறங்கி சில மணி நேரங்களில் அந்த இடத்தை முழுமையாகத் தூய்மைப்படுத்தினர்.
இதனால் தற்போது அவ்வழியாகச் செல்லும் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர். உடனடியாக நடவடிக்கை எடுத்த ஆட்சியர் பவன் குமாருக்கு நன்றி மற்றும் பாராட்டைத் தெரிவித்துள்ளனர்.