பழைய 100 நாள் வேலை திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள்- கோவை வந்த நிதின் நபீன் எடுத்துரைப்பு…

கோவை: 100 நாள் வேலையின் பழைய திட்டத்தில் பல்வேறு குளறும்படிகள் இருந்தது என நிதின் நபின் தெரிவித்தார்.

கோவை நீலாம்பூரில் 125 நாள் வேலைத்திட்டப் பணியாளர்களைச் தேசிய பாஜக செயல் தலைவர் நிதின் சந்தித்தார்.

கோவை மாவட்டம் சூலூர் நீலாம்பூர் பகுதியில் உள்ள வேடப்பாசாமி கோவில் ஆலமரத்தடியில் நூற்று இருபத்தைந்து நாள் வேலைத்திட்ட பணியாளர்களை பாஜகவின் செயல் தலைவர் நிதின் நபின் சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர்,பொங்கல் நல்வாழ்த்துகள், வாழ்க தமிழ் என்றார்.

100 நாள் வேலை வாய்ப்பு என்ற பழைய திட்டம் தற்போது பிரதமரால் 125 நாளாக மாற்றப்பட்டுள்ளது, அந்த திட்டத்தை பற்றி விளக்குவதற்காக இங்கு வருகை புரிந்துள்ளேன் என்றார். இந்தத் திட்டத்தில் பல்வேறு லாபங்கள் உள்ளது என்றும் இதன் மூலம் உங்கள் கிராமத்திற்கு உகந்த திட்டத்தை நீங்களே வகுத்துக் கொண்டு அதனை நடைமுறைப்படுத்தலாம் என்றார்.

பழைய திட்டத்தில் பல்வேறு குளறும்படிகள் இருந்தது என்றும் மத்திய அரசு நேரடியாக உங்களுக்கு பணத்தை கொண்டு வந்து சேர்க்கின்ற விஷயத்தை செய்தாலும் கூட இங்க இருக்கக்கூடிய அரசாங்கம் அந்த பணத்தை சுரண்டி ஊழலில் ஈடுபட்டு கிராமங்களை வஞ்சித்துக் கொண்டிருந்தார்கள்,தற்பொழுது அது தடுத்து நிறுத்தப்பட்டு மத்திய அரசு வழங்கக்கூடிய பணம் நேரடியாக உங்களிடம் வந்து சேரும் என்றார்.

லஞ்ச லாவண்யம் இல்லாத அரசை கொடுக்க வேண்டும் என்பதுதான் பிரதமரின் கனவு, இந்த திட்டத்தின் கீழ் மத்திய அரசு தரும் பணத்தை திமுக அரசாங்கம் புரோக்கர்கள் மூலம் சுரண்டினார்கள் அது நிறுத்தப்பட வேண்டும் என்பதுதான் இந்த புதிய திட்டத்தின் முக்கிய நோக்கம் என தெரிவித்தார்.

வரக்கூடிய நாளில் தமிழக முன்னேற வேண்டும் தமிழக முன்னேறினால் புதிய இந்தியாவை உருவாக்க முடியும் என்பதுதான் பிரதமரின் கனவு ,பிரதமரை பொறுத்தவரை சாதாரண மக்கள் என்றும் கஷ்டப்படக் கூடாது, கிராம மக்கள் நன்றாக வாழ வேண்டும் அவர்களுக்கான பணம் அவர்களிடம் சேர வேண்டும் என்பதுதான் பிரதமர் மோடியின் திட்டங்கள் என்றார்.

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மலரும் மகளிருக்கு தகுந்த பாதுகாப்பு, மகளிருக்கான வளர்ச்சி என்பதுதான் பிரதமர் மோடியின் நோக்கம் ஆகும் என தெரிவித்தார்.

சட்டி 👍
SEO மட்டும் கீழே — நீங்கள் சேமித்த விதிமுறைகளுக்கு முழுமையாக ஏற்ப (English only, fixed order, plain text):

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

Join WhatsApp