பக்கத்துவீட்டில் கைவரிசை… ஹாயாக சுற்றிய முதியவர் சிக்கினார்!

கோவை: கோவையில் வாலிபரின் ஸ்கூட்டரை திருடிய பக்கத்து வீட்டுக்காரரை போலீசார் கைது செய்தனர். 10 நாட்களுக்கு பின் சிக்கினார்

ராமநாதபுரம் கிருஷ்ணர் கோயில் வீதியை சேர்ந்தவர் நாகராஜ் (33). இவர் தனது ஸ்கூட்டரை கடந்த 17ம் தேதி இரவு வீட்டின் முன்பு நிறுத்திவிட்டுத் தூங்கச் சென்றார்.

மறுநாள் காலை எழுந்து வந்து பார்த்த போது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஸ்கூட்டர் காணாமல் போயிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து நாகராஜ் ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி ஸ்கூட்டரைத் தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை போலீசார் ராமநாதபுரம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக ஸ்கூட்டரில் வந்த முதியவரை தடுத்து நிறுத்தி ஆவணங்களைப் பரிசோதனை செய்தனர்.

அப்போது அந்த ஸ்கூட்டர், 10 நாட்களுக்கு முன்பு திருட்டு போன நாகராஜின் ஸ்கூட்டர் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அந்த முதியவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் நாகராஜின் பக்கத்து வீட்டுக்காரர் புவனேந்திரன் (52) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Recent News

Video

Join WhatsApp