கோவை: SIHS காலனியில் புதிய பார் அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சிங்காநல்லூரை அடுத்த எஸ்.ஐ.ஹெச்.எஸ் காலனியில் கோமதி நகர் உள்ளது. இங்கே குடியிருப்புப் பகுதியில் புதிய பார் உடன் கூடிய நவீன உணவகம் அமைய உள்ளதாக கூறப்படுகிறது.
பொது மக்களின் கருத்தை கேட்காமல், இதற்கு அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளதாக தெரிகிறது.
மேலும் இப்பகுதியில் ஏற்கனவே ஒரு அரசு டாஸ்மாக் இயங்கி வருகிறது. அதற்கு மது அருந்த வரும் குடிமகன்களால் பெண்களுக்கு பல பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது.
எனவே இதே பகுதியில் மீண்டும் புதிதாக பார் அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து கோமதி நகர், சிவலிங்கபுரம், சூர்யா நகர், கண்ணன் நகர், செந்தில் நகர், சின்னசாமி லே அவுட், சிடிசி காலனி, எஸ்.ஐ.ஹெச்.எஸ் காலனி மக்கள் போர் கோடி உயர்த்தி உள்ளார்கள்.
இந்நிலையில் அப்பகுதியில் பார் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று மக்கள் கூடி இருந்தனர். அவர்கள் அங்கு மதுக்கடை அமைக்க கூடாது என வலியுறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கோவை செய்திகள், அரசு, ரயில்வே மற்றும் மின்தடை அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈
ஊரைச்சுற்றி ஏற்கனவே பல பார்கள் உள்ள நிலையில், புதிதாக பார் அமைக்க விடமாட்டோம் என்று பொதுமக்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.