ஒண்டிப்புதூர் பகுதியில் புதிய மதுபான கடை- அதிமுக எம்.எல்.ஏ உட்பட பல்வேறு கட்சிகள் இணைந்து எதிர்ப்பு…

கோவை: ஒண்டிப்புதூர் பகுதியில் புதிதாக அமைய உள்ள மதுபான கடையை எதிர்த்து எம் எல் ஏ ஆர்ப்பாட்டம் மேற்கொண்டார்.

கோவை ஒண்டிப்புதூரை அடுத்து நெசவாளர் காலனி பகுதியில் புதிய டாஸ்மாக் கடை திறப்பதை கண்டித்து கோவை சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கே ஆர் ஜெயராமன் தலைமையில் பாஜக ,தமிழக வெற்றி கழகம் கட்சிகள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் சிங்காநல்லூர் தொகுதி
ஒண்டிபதூர் பட்டணம் மெயின்ரோட்டில் அரசு மகளிர் விடுதி, பள்ளிக்கூடம், அரசு மருத்துவமணை அருகே போக்குவரத்திற்கு இடையூறாக திடீரென லைசென்ஸ் இல்லாமல் 11to11 மதுபானக் கடை திறக்கப்பட உள்ளது.

அதனை எதிர்த்து அதிமுக சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராம தலைமையில் அதிமுக தொண்டர்கள் அதிமுக மகளிர் அணியினர் கழக நிர்வாகிகள்
மற்றும் பாஜக தவெக மற்றும் பொதுமக்கள் பலரும் ஒன்று சேர்ந்து கடுமையான எதிர்பு கோஷங்கள் எழுப்பி போராட்டம் மேற்கொண்டனர்.

அந்தப் பகுதியில் மதுபான கடை வந்தால் பொதுமக்களுக்கும் பள்ளி குழந்தைகளுக்கும் கல்லூரி செல்லும் மாணவ மாணவியர்களுக்கு பெரும் இடையூறு ஏற்படும் என்றும் அதனால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும் எனவும் வலியுறுத்திய அவர்கள் அந்த மதுபான கடை வராமல் அரசு தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

போலீசாரிடமிருந்து தப்ப முயன்று கால்களை முறித்து கொண்ட முன்னாள் குற்றவாளிகள்- கோவையில் நடந்த சம்பவம்…

கோவை: கோவையில் 5.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேம்பாலத்தில் இரிந்து கீழே குதித்த குற்றவாளிகளுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. கோவையில் கஞ்சாவை விற்பனைக்காக கடத்திய போது போலீசாரிடம் இருந்து தப்ப முயன்று...

Video

Join WhatsApp