13 மாத கருவுடன் உயிரிழந்த பெண் யானை- கோவையில் சோகம்…

கோவை: கோவையில் 13 மாத கருவுடன் பெண் யானை உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை தொண்டாமுத்தூர் அருகே குப்பனூரில் தனியார் தோட்டத்தில் கடந்த வாரம் சேற்றில் சிக்கி மீட்கப்பட்ட பெண் யானை, வயிற்றில் 13 மாத பெண் கருவுடன் உயிரிழந்த சம்பவம் இயற்கை வன உயிரின ஆர்வலர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

கோவை, மதுக்கரை வனச்சரகம் எட்டிமடை காப்புக்காடு பகுதியில் உயிரிழந்து கிடந்த 50 வயது பெண் யானையின் உடல், மாவட்ட வன அலுவலர் (DFO) ஜெயராஜ் தலைமையில் இன்று உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, அந்த யானை கர்ப்பமாக இருந்ததும், அதன் வயிற்றில் 13 மாதங்களே ஆன பெண் யானை கரு இருந்ததும் கண்டறியப்பட்டது.

யானையின் இறப்பிற்கான காரணங்கள் குறித்து வனத்துறை தரப்பில் கூறுகையில், உயிரிழந்த யானையின் இதயம், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் உள்ளிட்ட முக்கிய உறுப்புகள் கடுமையாகச் சேதம் அடைந்து உள்ளன.
கடந்த சில வாரங்களாக அந்த யானை உணவு உட்கொள்ளாமல் இருந்து உள்ளது.

50 வயதான இந்த யானை, கர்ப்பம் தரித்து இருந்த நிலையில் ஏற்பட்ட உடல்நலக் கோளாறுகளால் உயிரிழந்து உள்ளது.

Advertisement

இந்த யானை தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு குப்பனூர் பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் சேற்றில் சிக்கி தவித்த போது வனத்துறையினரால் மீட்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

டெங்கு கொசுப் பரவல்- கட்டிட உரிமையாளருக்கு கோவை மாநகராட்சி 50,000 அபராதம்…

கோவை: டெங்கு கொசுப் புழுக்கள் கண்டறியப்ப கட்டிட உரிமையாளருக்கு 50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கோயம்பத்தூர் மாநகராட்சிக்குட்ப்பட்ட பகுதிகளில் கட்டுமானப்பணிகள் நடைபெறும் இடங்களில் மூடி போடாமல் டிரம்கள் மற்றும் கலன்களில் தண்ணீரில் நிரப்பி வைப்பது, டயர்கள்....

Latest News Coimbatore

Video

இளைஞர்கள் பைக் பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய அதிர்ச்சி வீடியோ உள்ளே…!

கோவை: கோவையில் அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கிய இளைஞர் நெஞ்சை பதற வைக்கும் பகீர் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பு. கோவையில் இளைஞர்கள் வாகனங்களை இயக்குவது அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டி வருகின்றனர். முறையாக...