கோவை: கோவையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் கலை கட்டியது.
கோவை சரவணம்பட்டியில் உள்ள ப்ரோசோன் மாலில் புத்தாண்டு கொண்டாட்டம் திரைப்படப் பாடகர் க்ரிஷ் அவரது இசைக்கச்சேரியுடன் வெகு சிறப்பாக நடைபெற்றது.
2026 புத்தாண்டு பிறந்ததை முன்னிட்டு அனைத்து இடங்களிலும் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக நடைபெற்றன. கோவையை பொறுத்தவரை வழக்கமாக கொண்டாடும் ரேஸ்கோர்ஸ், அவினாசி சாலை, உக்கடம் ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட பகுதிகளில் அனுமதி மறுக்கப்பட்டு தனியார் மால்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி அளிக்கப்பட்டது.
அதன்படி கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள ப்ரோசோன் மாலில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சி திரைப்பட பாடகர் கிரிஷ் அவரது இசைக்கச்சேரியுடன் நடைபெற்றது இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சினிமா பாடல்களுக்கு பாடி பாடி மகிழ்ந்தனர். மேலும் DJ நிகழ்ச்சியும் நடைபெற்றது.
தொடர்ந்து புத்தாண்டு 12 மணிக்கு பிறந்ததும் பட்டாசுகள் வெடிக்கப்பட்டு அனைவரும் மகிழ்ச்சியுடன் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

