கோவை: கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால் சுயேட்சை வேட்பாளர் சாலையில் படுத்து போராட்டம் மேற்கொண்டார்
கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனு பரிசீலனை செய்யப்பட்டது.இந்நிலையில் தலித் ஜெயராஜ் என்ற சுயேட்சை வேட்பாளரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக கூறி தேர்தல் அதிகாரியிடம் கடுமையாக முறையிட்டார். போலீசார் அவரை சமாதானப்படுத்தினர்.
இருப்பினும் நான் ஒரு தலித் எனது வேட்பு மனு திட்டமிட்டு நிராகரித்துள்ளது என சிறுவாணி சாலையில் படுத்து உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டார். அதனால் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக பரபரப்பான சூழல் நிலவியது.
தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தனது மனு நிராகரிக்கப்பட்டது குறித்து விளக்கம் கேட்ட நிலையில் எந்த பதிலும் தெரிவிக்காமல் சென்றதால் ஆத்திரமடைந்த தலித் ஜெயராஜ் சிறுவாணி சாலையில் படுத்து உருண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் காவல்துறையினர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அழைத்து சென்றனர்.

