One day trip from Coimbatore: தொடர் விடுமுறை தினங்கள் வருவதை முன்னிட்டு குழந்தைகளை குட்டி டூர் அழைத்துச் செல்ல விரும்புகிறீர்களா? இதோ கோவை அருகே உள்ள சிறந்த அட்வென்சர் மற்றும் பொழுபோக்கு பூங்காக்கள்.
Table of Contents
விடுமுறை தொடங்கியதால் உங்கள் வீட்டு குட்டீஸ்களுக்கு வீடுகளுக்குள்ளேயே இருந்து போர் அடித்து விட்டதா? அப்படியானால், இந்த விடுமுறையை அவர்கள் மறக்க முடியாதபடி ஒரு பிளான் பண்ணுங்க. சினிமா, குளக்கரை என்று எப்போதும் போல இல்லாமல், இந்த முறை கோவையில் உள்ள அட்வென்சர்ஸ் விளையாட்டுகளுக்கு அவர்களை கூட்டிச் சென்று, குடும்பத்தோடு புது விதமான அனுபவத்தை கண்டு மகிழ்ச்சியடையுங்கள்.
சரி, அப்படிபட்ட அட்வென்சர்ஸ் மற்றும் சிறந்த பொழுபோக்கு இடங்கள் கோவை மற்றும் கோவையின் சுற்றுவட்டாரங்களில் எங்கெல்லாம் இருக்கிறது என்று உங்களுக்கு குழப்பமாக இருக்கிறதா? கவலையை விடுங்க, அதுக்கு தானே நாங்க இருக்கோம்.
கோவை மற்றும் சுற்றுவட்டாரங்களில் உள்ள அட்வென்ச்சர்ஸ் பொழுது போக்கு இடங்களின் பட்டியல் இதோ
One day trip from Coimbatore
பிளாக் தண்டர் தீம் பார்க் (Black Thunder Coimbatore)

(ஊட்டி மெயின் ரோடு, ஓடந்துறை) பிளாக் தண்டர் தீம் பார்க் நாட்டின் மிகப்பெரிய நீர் பூங்காவாகும். இது நீலகிரி மலையடிவாரமான, மேட்டுப்பாளையம்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்தப் பூங்காவில் 70க்கும் மேற்பட்ட விளையாட்டுகள் உள்ளன. அதில் 35 நீர் விளையாட்டுகள் ஆகும். கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் சென்று, அங்கிருந்து இந்த பூங்காவுக்கு செல்லலாம்.
இந்த அட்வென்சர் பார்க்கின் கட்டண விபரங்கள், இங்கு என்னென்ன விளையாட்டுகள் உள்ளன என்பதை பின்வரும் லிங்க்-கில் தெரிந்து கொள்ளலாம்: https://www.blackthunder.in/
கோவை கொண்டாட்டம் (Kovai Kondattam)

(சிறுவாணி மெயின் ரோடு, காளம்பாளையம்) பொழுது போக்கு பூங்காவான கோவைக் கொண்டாட்டம் பேரூரில் அமைந்துள்ளது. இங்கு, தண்ணீர் நடனம், அலை வீசும் செயற்கை குளம், மோதும் கார்கள், அருவி போன்ற அமைப்பு, காணொளிக் கூடம் என பலவிதமான பொழுது போக்கு அம்சங்கள் உள்ளன. அதுமட்டுமில்லாமல், திருமண நாள், பிறந்த நாள் கொண்டாட்டங்களை பூங்கா நிர்வாகமே ஏற்பாடு செய்து தருகிறார்கள்.
கோவை கொண்டாட்டத்தின் கட்டணம் மற்றும் சேவை விபரங்களுக்கு இந்த லிங்க்-ஐ கிளிக் செய்யலாம்: https://www.kovaikondattam.com/
ஆக்ஸிஜோன் அட்வென்ச்சர் பார்க் (Oxyzone)
(சவுரிபாளையம்) இந்தப் பூங்கா பீளமேடு-சவுரிபாளையம் சாலையில் பி.எஸ்.ஜி., மருத்துவக் கல்லூரியின் பின்புறம் அமைந்துள்ளது. குழந்தைகளின் பொழுதை கழிக்க ஏற்ற இடமாகும். இங்கு குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான பல்வேறு விளையாட்டு அம்சங்கள் உள்ளன.
இதில் உள்ள அம்சங்களைத் தெரிந்துகொள்ள: https://www.theoxyzone.com/

என்டார்டிகா சீ வேல்ட் Entartica Sea World
(உக்கடம்) கோவையில் உள்ள உக்கடம் பெரியகுள ஏரியில் அமைந்துள்ள நீர் பொழுதுபோக்கு மையம் தான் என்டார்டிகா சீ வேர்ல்ட். இங்கு ஜெட் ஸ்கீயிங், கயாக்கிங், பான்டூன் படகு சவாரி, அக்வா ரோலர் உள்ளிட்ட ஏராளமான நீர் விளையாட்டுகளும், படகு சவாரிகளும் இருக்கின்றன.
குறிப்பிட்ட நாளில் இதன் சேவை உள்ளதா என்பதை தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொண்டு பிறகு செல்லலாம். https://entartica.com/periyakulam-lake-coimbatore/

பேன்டசி பார்க் (Fantasy Park)
(பாலக்காடு) கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மழம்புலா அணையின் அருகே இந்த பேன்டசி பார்க் அமைந்துள்ளது. பிளாக் தண்டர், கோவை கொண்டாட்டம் போலவே இதுவும் குடும்பத்துடன் சென்று மகிழ ஒரு சிறந்த அம்யூஸ்மென்ட் பார்க்.
இந்த பார்க்கின் விளையாட்டு மற்றும் கட்டண விபரங்களை பின்வரும் லிங்க்-ல் காணலாம்: https://www.fantasypark.in/

ஸ்நோ பேன்டசி (Snow Fantasy)
(ப்ரூக் பீல்ட்ஸ்) கோவை ப்ரூக் பீல்ட்ஸ் வணிக வளாகத்தில் ஸ்நோ பேன்டசி பார்க் அமைந்துள்ளது. காஷ்மீர் உள்ளிட்ட பனிப்பிரதேசங்களைப் போல் ஒரு மாதிரி செயற்கை பனிப்பிரதேசம் இங்கு அமைக்கப்பட்டுள்ள்ளது. பனிச்சறுக்கு விளையாட்டு, குளிர் மற்றும் சூடான காபி ஆகியவற்றை இங்கு அனுபவிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு: https://www.snowfantasy.in/


