கோவை: ஊட்டி மலர் கண்காட்சி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பூங்காக்களில் நடைபெறும் கண்காட்சி விவரங்களும் வெளியாகியுள்ளன.
ஆண்டுதோறும் கோடைகாலத்தில் உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில், தாவரவியல் பூங்காவில் 127வது மலர் கண்காட்சி வரும் மே மாதம் 16ம் தேதி தொடங்குகிறது. இந்த கண்காட்சி மே 21ம் தேதி வரை மொத்தம் 6 நாட்கள் நடைபெற உள்ளது.
முன்னதாக ஊட்டியில் உள்ள நூற்றாண்டு ரோஜா பூங்காவில் 20வது ரோஜா மலர் கண்காட்சி மே மாதம் 10, 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
இது தவிர கோத்தகிரியில் உள்ள நேரு பூங்காவில் மே 3 மற்றும் 4 ஆகிய இரண்டு நாட்கள் காய்கறி கண்காட்சியும் நடைபெறுகிறது.
முதன்முறையாக

குன்னூர் காட்டேரி பூங்காவில் முதன்முறையாக மலைப்பயிர்கள் கண்காட்சியும் நடைபெற உள்ளது. இக்கண்காட்சி மே 30ம் தேதி முதல், ஜூன் 1ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதேபோல், மே 9,10,11 ஆகிய தேதிகளில் கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சியும் நடைபெற உள்ளது.
கோடையை குளுகுளு வென்று கழிக்க நினைக்கும் கோவை வாசிகள் இக்கண்காட்சிகளை மிஸ் பண்ணாமல் பார்த்தும், உதகையின் சீதோஷன நிலையை அனுபவித்தும் மகிழலாம்.