கோவைக்கு ஆரஞ்சு அலர்ட்- மாநில பேரிடர் மீட்பு குழுவினர் வருகை…

கோவை: கோவை மாவட்டத்திற்கு இன்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் வருகை புரிந்துள்ளனர்…

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இன்று கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலட் கொடுக்கப்பட்டுள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதிகளில் அதிகன மழை பெய்ய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அரக்கோணத்தில் இருந்து மாநில பேரிடர் மீட்பு குழுவினர் இன்று கோவைக்கு வந்துள்ளனர்.

மேலும், மாவட்ட கண்காணிப்பாளர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மழைக்கால பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

Recent News

Video

Join WhatsApp