Header Top Ad
Header Top Ad

கோவைக்கு ஆரஞ்சு அலெர்ட்: மேற்கு மண்டலத்தில் இன்று இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு!

கோவை: தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் லேசானது முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கோவைக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த ஒரு சில தினங்களாக மழை பெய்து வருகிறது. கோவை மாநகரில் இந்த வாரம் இரண்டு நாட்கள் கனமழை பெய்தது.

இந்த நிலையில், இன்று இரவு 7 மணி வரை மழை 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு (ஆரஞ்சு அலெர்ட்) வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, சென்னை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மதுரை, திருவண்ணாமலை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசான மழைக்கு (மஞ்சள் அலெர்ட்) வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Recent News