கோவை: கோவையில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.
கோவை மாவட்டத்தில் இந்த வாரம் முழுவதும் மலைப்பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், நகரப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு என்றும் வானிலை மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
மேலும், நாளை மற்றும் நாளை மறுநாள் கோவையில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மாநகரை ஒட்டியுள்ள பகுதிகளிலும், கேரளாவை ஒட்டியுள்ள பகுதிகளில்லும் மிக கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வடவள்ளி, சங்கனூர், பி.என்.புதூர், சிங்காநல்லூர், ஆர்.எஸ்.புரம், கவுண்டம்பாளையம், துடியலூர், இடையர்பாளையம் சுற்றுவட்டாரங்களில் மழை பெய்து வருவதாக வாசகர்கள் தெரிவித்துள்ளனர்.
உங்கள் பகுதியில் மழையா, நியூஸ் க்ளவுட்ஸ் வாட்ஸ்-ஆப் எண்ணிற்கு தெரியப்படுத்துங்கள். கோவை மக்களுக்கு தெரியப்படுத்தலாம்.