கோவை: 25 ஆண்டுகளுக்கு கழித்து ரீ ரிலீஸ் செய்யப்பட்ட படையப்பா படத்தை கோவையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகமாக கண்டு களித்தனர்.
25 ஆண்டுகள் கழித்து மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட படையப்பா திரைப்படத்தை இளைஞர்களும் பெரியவர்களும் ஆர்வமுடன் பார்ப்பதற்கு திரையரங்குகளுக்கு வருகை புரிந்தனர்.

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் சிவாஜிகணேசன், ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணா, செளந்தர்யா உள்ளிட்டோர் நடிப்பில் 1999ம் ஆண்டு வெளியான படையப்பா திரைப்படம் இன்று மீண்டும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று மீண்டும் படையப்பா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இதனை ரஜினி ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
கோவையிலும் பல்வேறு திரையரங்குகளில் படையப்பா திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. இந்த படத்தை காண்பதற்கு சிறியவர்கள் இளைஞர்கள் பெரியவர்கள் என அனைவரும் ஆர்வமுடன் வருகை புரிந்தனர். மேலும் ரஜினி ரசிகர் மன்றத்தினர் கேக் வெட்டி திரைப்படத்தை காண வந்தவர்களுக்கு கொடுத்து மகிழ்ந்தனர்.
திரைப்படத்தை காண வந்த ரஜினி ரசிகர் ஹக்கீம் என்பவர் டிசம்பர் 12ஆம் தேதியை தமிழக அரசு Style Day என்று அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.



