கோவை: ஆலமரத்தின் வேரில் தேசத் தலைவர்களின் ஓவியத்தை வரைந்த கோவை கலைஞரின் கைவண்ணம் அனைவரையும் கவர்ந்துள்ளது.
இந்திய நாட்டின் 79 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவையை சேர்ந்த UMT ராஜா என்ற கலைஞர் ஆலமரத்தின் வேரில் தேசியக் கொடியையும் தேசத் தலைவர்களின் புகைப்படத்தையும் வரைந்து அசத்தியுள்ளார்.
“இந்திய தேசத்தின் ஆணி வேர்கள்” என்ற தலைப்பில் ஆலமரத்தில் வேர்ப்பகுதியில் தேசியக்கொடி, இந்திய வரைபடம் ஆகியவற்றை வரைந்து அதனுடன், மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, கொடிகாத்த குமரன், சுபாஷ் சந்திர போஸ், ரவீந்திரநாத் தாகூர், சிவாஜி.

சர்தார் வல்லபாய் பட்டேல், டாக்டர் ராதாகிருஷ்ணன், பாரதியார், பால கங்காதர தீலகர், காமராஜர், வ.உ. சிதம்பரனார், ராஜாராம் மோகன் ராய், அப்துல் கலாம், உள்ளிட்ட 20 தலைவர்களின் படங்களை ஓவியமாக திட்டி உள்ளார்.
இதற்கு முன்பும் குடியரசு தின விழா, தேசத் தலைவர்களின் பிறந்தநாள் ஆகியவற்றிற்கும் வித்தியாசமான முறையில் இதுபோன்ற பல்வேறு ஓவியங்களை இவர் வரைந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.