கோவை: மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்தில் கோவையில் மூன்று மாத பெண் குழந்தைக்கு பெயர் சூட்டினார் எடப்பாடி பழனிச்சாமி…
கோவையில் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற சுற்றுப்பயணத்தை கோவையில் நேற்று துவங்கினார். அதன் இரண்டாவது நாளான இன்று கோவை வடக்கு மற்றும் தெற்கு தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

வெங்கடாபுரம் சாய்பாபா காலனி பகுதியில் பொதுமக்களை சந்தித்தார். அவருக்கு அதிமுக தொண்டர்களும் பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்பொழுது வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்த வாசுதேவன் பூஜா தம்பதியினரின் மூன்று மாத பெண் குழந்தைக்கு லலிதா என பெயர் சூட்டினார்.
தொடர்ந்து டவுன்ஹால் பகுதிக்கு வந்த அவருக்கு 16 அடி உயர பிரம்மாண்ட ரோஜா பூ மாலை அணிவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது அதனை பிரச்சார வாகனத்தில் இருந்த வண்ணம் ஏற்றுக்கொண்டார்.

டவுன்ஹால் பகுதியில் எடப்பாடி பழனிச்சாமி கடந்து சென்றதை தொடர்ந்து அங்கிருந்த ஒருவர் பிக்பாக்கெட் அடிக்க முயன்றதாக கூறி அங்கிருந்தவர்கள் அவரை பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
Pls save Coimbatore roads also…we could not even walk also…