கோவை: வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையன்று செம்மொழி பூங்காவை பார்வையிட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருகை புரிந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை தினமான நேற்று கோவை செம்மொழி பூங்காவிற்கு ஆயிரக்கணக்கான மக்கள் வருகை புரிந்தனர். மேலும் கோவை செம்மொழி பூங்காவில் நுழைவுச் சீட்டு பெறுவதற்கு க்யூஆர் கோர்டு வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கோவை காந்திபுரம் பகுதியில் நவம்பர் 25ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செம்மொழி பூங்காவை திறந்து வைத்தார். இந்த பூங்காவானது டிசம்பர் 11ம் தேதி முதல் பொதுமக்கள் அனுமதிக்காக திறக்கப்பட்டது.

சுமார் 45 ஏக்கர் பரப்பளவில் செலவில் அமைக்கப்பட்ட இந்த பூங்காவில், சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டு கடையேழு வள்ளல்களின் கொடை சிற்பங்கள், அரியவகை மரங்கள், செடிகள், செம்மொழி வனம், மூலிகைத் தோட்டம், அமைதி வனம்,ரோஜா தோட்டம், செயற்கை நீர்வீழ்ச்சி, குழந்தைகள் விளையாட்டு பகுதி, திறந்தவெளி அரங்கு, உணவகம் உள்ளிட்டவை அடங்கி உள்ளன.
பூங்காவில் உள்ள ஒவ்வொரு தாவரத்திற்கும் QR கோடு பொருத்தப்பட்டு, அதன் மூலம் தாவரங்களைப் பற்றிய விவரங்களை அறிந்துகொள்ளலாம். இந்த பூங்காவிற்கு பெரியவர்களுக்கு 15 ரூபாய், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 5 ரூபாய் நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
கோவை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்புகளை கடந்த திறக்கப்பட்ட இந்த செம்மொழி பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை நாளான நேற்று காலை முதல் ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடனும் தொடர்ந்து வருகை புரிந்து வருகின்றனர்.

மேலும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று டிக்கெட்டுகளை பெறுவதை தவிர்க்கும் வகையில் ஆங்காங்கே க்யூ ஆர் கோடு வைக்கப்பட்டு அதன் மூலமும் டிக்கெட்டுகளை பெரும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இதுவும் பொது மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
வழக்கமாக வாழ விடுமுறை தினங்களில் கோவை மக்கள் பெரும்பாலும் வணிக வளாகங்கள் திரையரங்குகள் உள்ளிட்ட இடங்களுக்கு செல்கின்றனர் அதை தவிர்த்தால் ஸ்மார்ட் சிட்டி குளக்கரைகள் உள்ள நிலையில் கூடுதலாக செம்மொழி பூங்கா திறக்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் இங்கு வந்தால் நேரம் போவதே தெரிவதில்லை என்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல்வேறு காவலர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதால் எந்த ஒரு அச்சமும் இன்றி இந்த பூங்காவை சுற்றி பார்ப்பதாக தெரிவித்துள்ளனர். கோவையில் முக்கியமான பொழுதுபோக்கு இடங்களில் செம்மொழி போங்க நிச்சயமாக இருக்கும் என்றும் பல்வேறு பொதுமக்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
நேற்று மட்டும் சுமார் 27,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் செம்மொழி பூங்காவை பார்வையிட வந்திருப்பார்கள் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

