Header Top Ad
Header Top Ad

கோவை மக்களே வீடு கட்ட உள்ளீர்களா?- உங்களுக்கான கண்காட்சி துவங்கியது

கோவை: கோவையில் FairPro 2025 எனும் வீடு வாங்குபவர்களின் கண்காட்சி துவங்கியது.

கிரெடாய் அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் வீடு வாங்குபவர்களின் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான FairPro 2025 வீடு வாங்குபவர்களின் கண்காட்சி கொடிசியா வளாகத்தில் இன்று துவங்கியது.

மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியை பாரத ஸ்டேட் வங்கியின் பொது மேலாளர் ஹரிதாபூரணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி கண்காட்சியை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் கிரெடாய் அமைப்பின் தலைவர் அரவிந்த் குமார் உட்பட பல்வேறு முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த கண்காட்சியில் 30-க்கும் மேற்பட்ட கட்டுமான நிறுவனங்கள் அரங்குகளை அமைத்து உள்ளனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுமான திட்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

20 லட்சம் முதல் 7 கோடி வரையிலான விலைகளில் சொத்துக்கள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் பங்கேற்றுள்ள நிறுவனங்கள் சிறப்பு சலுகைகளையும் அறிவித்துள்ளனர்.

Advertisement

இதில் SBI உட்பட அரசு வங்கிகள் LIC ஆகியவை பங்கேற்று வீட்டுக் கடன் வசதிகளுக்கான ஆலோசனைகளையும் வழங்குகின்றனர்.

பல்வேறு கட்டுமான நிறுவனங்கள் ஒரே இடத்தில் இருப்பதால் பொதுமக்கள் பல்வேறு நிறுவனங்கள், வங்கி கடன் வசதிகள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் இந்த கண்காட்சி நடைபெறுகிறது.

Recent News