கோவை: கோவையில் நள்ளிரவில் பைக்கை திருடி சென்ற நபர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
கோவையில் ஆர் எஸ் புரம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை திருடி சென்ற நபர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
கேரளாவை சேர்ந்தவர் சுஜின். இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் இவரது இருசக்கர வாகனத்தை நேற்று வழக்கம்போல் ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள அவரது வீட்டின் முன்பு நிறுத்தியுள்ளர்.அப்போது நள்ளிரவில் வந்த இரண்டு பேர் விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தின் லாக்கை உடைத்து திருடி சென்றுள்ளனர்.
இருசக்கர வாகனத்தை லாபகமாக திருடிச் செல்வது அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.இந்நிலையில் சுஜின் வாகனம் திருட்டு போனது குறித்து ஆர் எஸ் புரம் காவல் நிலையத்தில் சிசிடிவி காட்சிகளுடன் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.