கோவை: கோவையில் பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு குருதிக்கொடை முகாம் நடைபெற்றது.
தந்தை பெரியாரின் பிறந்த நாளை தந்தை பெரியார் திராவிடர் கழகம் உட்பட பெரியார் இயக்கங்கள் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவையில் காந்திபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியார் திராவிடர் கழக அலுவலகத்தில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது.
இதனை கோவை திமுக மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திக் துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் பெரியார் அமைப்புகளை சார்ந்தவர்கள் பலரும் குருதிகொடை வழங்கினர். இந்த நிகழ்வில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சாதிகளை உடைக்கின்ற வண்ணம் இந்த குருதிக்கொடை நிகழ்ச்சியை 30 ஆண்டுகளாக நடத்தி வருவதாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் தெரிவித்துள்ளனர்.