கோவை: பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு பீப் பிரியாணி, பீப் பப்ஸ் வழங்கி கரப்பான்பூச்சி குழுவினர் கொண்டாடினர்.
கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்தில் பெரியாரின் 147 வது பிறந்தநாளை முன்னிட்டு கரப்பான் பூச்சி யூடியூப் குழுவினர் சார்பில் பீப் பிரியாணி , பீப் பப்ஸ் விருத்து வைக்கப்பட்டது. இதை ஏராளமானோர் உண்டு ரசித்தனர்.
கோவையைச் சேர்ந்த அந்த குழுவினர் ஆண்டுதோறும் பெரியார் பிறந்த நாளில் மாட்டு இறைச்சி பிரியாணி வழங்குவது வழக்கம் . அதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டும் கோவை காந்திபுரம் பெரியார் படிப்பகத்தில் , பெரியாரின் 147 வது பிறந்தநாளை முன்னிட்டு பீப் பிரியாணி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன்,
பீப் பிரியாணி விருந்தினை துவக்கி வைத்து பொது மக்களுக்கு வழங்கினார். இதனை பொதுமக்கள் பலரும் உண்டு ரசித்தனர். உணவில் பாகுபாடு காட்டக் கூடாது என்பதற்காக பீப் பிரியாணி வழங்கும் நிகழ்ச்சியை ஆண்டுதோறும் நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
பிற உணவு வகைகளை போலவே இந்த உணவும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய உணவு என்பதை உணர்த்துவதற்காக பெரியாரின் பிறந்த நாள் விழா கொண்டாட்டமாக நடத்தி வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.