கோவை: பேரூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில்நேரடி சேர்க்கைக்கான தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் பேரூரில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் புதிதாக துவங்கப்பட்டுள்ளது.
Advanced CNC Machining Technician, Acronautical Structure and Equipment Fitter, Multimedia Animation&Special Effects, In-plantLogistics Assistant. Central Air Condition Plant Mechanic போன்ற தொழிற்பிரிவுகளுக்கு 2025-ஆம் ஆண்டுக்கான நேரடி சேர்க்கைக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மாணவர்களின் நலன் கருதி நேரடி சேர்க்கைக்கான தேதி 31.10.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்தொழிற்பயிற்சி நிலையமானது முற்றிலும் கட்டுமான தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு மட்டுமே என்பதால் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும்போது கட்டுமான தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் அட்டை தவறாது கொண்டுவர வேண்டும்.
சேர்க்கையில் சேர விரும்புவோர் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ். சாதிச் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் நான்கு, ஆதார் அட்டை முக்கியமாககட்டுமான தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களுடன் அரசு தொழிற்பயிற்சி நிலையம், இராமலிங்க அடிகள் அரங்க வளாகம், வேடப்பட்டி ரோடு, பேரூரில் அமைக்கப்பட்டுள்ள சேர்க்கை உதவி மையத்தைஅணுகவும். பயிற்சியில் சேரும் பயிற்சியாளர்களுக்கு இலவச சைக்கிள், சீருடை பாடநூல், வரைபட கருவிகள், காலணி, பஸ் பாஸ், அடையாள அட்டை வழங்கப்படும்.
மாதாந்திர உதவித்தொகையாக ரூ.750/-ம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரைதமிழ் வழியில் பயின்ற மாணவ மாணவிகளுக்கு புதுமைப்பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டத்தின்படி மாதந்தோறும் ரூ. 1000 உதவித்தொகையும் வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு 88254 34331, 95666 31310, 81220 47178, 98948 24775 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.


