Header Top Ad
Header Top Ad

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: கோவைக்கு எந்த இடம்? எவ்வளவு தேர்ச்சி? – முழு விவரம்!

கோவை: பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவில் கோவையில் தேர்வு எழுதிய மாணவர்களில் 97.48% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வை 7,92,494 மாணவ-மாணவிகள் எழுதினர். இதில், மாணவிகள் 4,19,316, மாணவர்கள் 3,83,128 பேர்.

Advertisement
Lazy Placeholder

தேர்வு எழுதியவர்களில் 7,53,142 பேர், அதாவது 95.03% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் 4,05,472 (96.7%), மாணவர்கள் 3,47,670 (93.16%) பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

வழக்கம் போலவே இந்தாண்டும் மாணவர்களை விட மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட 3.54% தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த கல்வியாண்டை விட இந்தாண்டு தமிழகத்தில் 0.47% மாணவர்கள் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Advertisement
Lazy Placeholder

இதில் அரியலூர் 98.82% தேர்ச்சியுடன் முதலிடம் பிடித்துள்ளது. ஈரோடு 97.98% இரண்டாமிடமும், திருப்பூர் 97.53% மூன்றாமிடமும், கோவை 97.48% தேர்ச்சியுடன் 4ம் இடமும் பிடித்துள்ளது. அடுத்ததாக குமரி 97.01% தேர்ச்சியுடன் 5ம் இடத்தை பிடித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் 363 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 180 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன.

கோவையில் மாணவர்கள் 16,135 பேர், மாணவிகள் 18,902 பேர் என மொத்தம் 35,037 பேர் தேர்வு எழுதினர். இதில், 15,579 மாணவர்களும். 18,576 மாணவிகளும் என மொத்தம் 34,155 பேர் தேர்ச்சியடைந்துள்ளன்ர. மாணவர்களில் 96.55% பேரும், மாணவிகளில் 98.28% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 1.73 % அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கோவையில் தேர்வு எழுதிய மாணவர்களில் மொத்தம் 97.48% பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.

Recent News

Latest Articles