கோவை: பொள்ளாச்சி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுவதை முன்னிட்டு கைது செய்யப்பட்ட 9 பேரும் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இளம் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு, இளைஞர்கள் அதனை வீடியோ எடுத்து கொடுமை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.
முதலில் பொள்ளாச்சியை டவுன் காவல் துறையினர் இக்கொடுமையை விசாரித்து வந்த நிலையில், வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றம் செய்யப்பட்டது.

இவ்வழக்கில் பொள்ளாச்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசு, சபரிராஜன், திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன், ஹரன்பால், பாபு, அருளானந்தம், அருண்குமார் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீது 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே இந்த வழக்கில் கோவை நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
இதனையடுத்து குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் இன்று கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

காலை 10 மணியளவில் தீர்ப்பு அறிவிக்கப்பட்ட உள்ளது. இதனையடுத்து கோவை நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.