கோவை: கோவையின் எந்தெந்த பேருந்து நிலையங்களில் இருந்து எந்தெந்த ஊர்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கோவையில் இருந்து மக்கள் அதிக அளவில் சொந்த ஊர்களுக்குச் செல்ல உள்ளதால், பேருந்து நிலையங்களில் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு, பயணிகளின் வசதிக்காக எந்த பேருந்து நிலையத்தில் இருந்து எந்த ஊர்களுக்குப் பேருந்துகள் இயக்கப்படும் என்பது குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கோயம்புத்தூர்) லிமிடெட் வெளியிட்டுள்ளது.
இதன்படி, வரும் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை கீழ்க்கண்ட பேருந்து நிலையங்களில் இருந்து குறிப்பிட்ட வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
சிங்காநல்லூர் பேருந்து நிலையம் :
மதுரை
தேனி
மற்றும் தென் மாவட்டங்கள்

சூலூர் பேருந்து நிலையம்
கரூர்
திருச்சி மார்க்கமாகச் செல்லும் ஊர்கள்
காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம்
சேலம்
திருப்பூர்
ஈரோடு
மேட்டுப்பாளையம்
சத்தியமங்கலம்
ஆவினாசி மார்க்கமாகச் செல்லும் ஊர்கள்
மேட்டுப்பாளையம் சாலை புது பஸ் ஸ்டாண்ட்
ஊட்டி
குன்னூர்
கோத்தகிரி
கூடலூர்
வாசகரக்ள் தாங்கள் செல்ல வேண்டிய ஊருக்கான பேருந்து எந்த பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ள இந்த செய்தி உதவும். கோவை வாசிகளுக்கு இந்த செய்தியை பகிர்ந்து உதவிடுங்கள்.

