கோவை: கோவையில் மாற்றுத்திறனாளிகள், மற்றும் மூத்த குடிமக்களுக்கு வீடுகளுக்கு சென்று தபால் வாக்கு செலுத்தும் பணிகள் துவங்கப்பட்டது.
தமிழக சட்டமன்ற தேர்தல் 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில் இன்று முதல் 3 நாட்களுக்கு மாற்றுத்திறனாளிகள், மற்றும் மூத்த குடிமக்களுக்கு வீடுகளுக்கு சென்று தபால் வாக்கு செலுத்தும் பணிகள் இன்று துவங்கி உள்ளது.
அதன்படி கோவை மாவட்டத்திலும் 10 சட்டமன்ற தொகுதிகளில் இந்த பணிகளை செய்வதற்கான பணியாளர்கள் வாகனங்களை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் பவன்குமார் வாக்கு செலுத்தும் இயந்திரங்கள் அனைத்தும் அடங்கிய வாகனத்தை பார்வையிட்டு அந்த அலுவலர்களுக்கு வழங்கி வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இது குறித்து பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர், கோவையில் 10 சட்டமன்ற தொகுதியில் 160 க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் 12,13,14 ஆகிய மூன்று தினங்களுக்கு இந்த பணிகளை மேற்கொள்வதாக தெரிவித்தார். 9000 க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இருப்பதாக கூறினார்.
தேர்தல் விதிமீறல்கள் குறித்தான கேள்விக்கு, அந்த வழக்குகள் காவல்துறையினர் மத்திய பாதுகாப்பு படையினர் நடவடிக்கைகள் எடுத்து வருவதாக தெரிவித்தார்.
தபால் வாக்குகளில் முறைகேடுகள் நடைபெறாமல் இருப்பதற்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுப்படுகிறது என்பது தொடர்பான கேள்விக்கு அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர் வாயிலாக வாக்களுக்கு தெளிவுபடுத்தி உள்ளதாக தெரிவித்தார்.
கோவை தெற்கு தொகுதியில் 18 சுயேட்சை வேட்பாளர்கள் கரூரில் இருந்து ஒரே நோட்டரியில் கையெழுத்து வாங்கியது தொடர்பாக புகார்கள் எழப்பட்டுள்ளதாக என்ற கேள்விக்கு அதனை தேர்தல் நடத்தும் அலுவலர் முழுமையாக ஆய்வு செய்து கொள்வார் தேர்தல் விதிகளுக்கு உட்பட்டு அதனை சரிபார்த்து கொள்வார் என பதில் அளித்தார்.


