மதுக்கரையில் நாளை மின்தடை

கோவை: மதுக்கரை சுற்றுவட்டாரத்திற்கு பட்ட பகுதிகளில் நாளை மின்தடை ஏற்பட உள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

கோவை குனியமுத்தூர் வட்டம், தெற்கு மின்பகிர்மான
செயற் பொறியாளர் சென்ராம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

Advertisement

குனியமுத்தூர் கோட்டத்திற்குட்பட்ட மதுக்கரை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (27ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மதுக்கரை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கே.ஜி.சாவடி, எம்.ஜி.ஆர்.நகர், பாலத்துறை, சுகுணாபுரம், பைப்பாஸ் ரோடு, பி.கே.புதூர், சாவடி புதூர், மதுக்கரை, காளியாபுரம், அறிவொளிநகர், எட்டிமடை, கோவைப்புதூர் ஒரு பகுதி ஆகிய இடங்களில் மின் விநியோகம் இருக்காது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம்

Recent News