Power Shutdown Coimbatore: கோவையில் ஜூலை 17ம் தேதி பல பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக தற்காலிக மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ள நிலையில், கோவையில் உள்ள 3 துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பின்வரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் என TANGEDCO அறிவித்துள்ளது.
Advertisement

Power Shutdown Coimbatore
சீரநாயக்கன் பாளையம் துணை மின்நிலையம்:
சீரநாயக்கன் பாளையம், பாப்பநாயக்கன்புதூர், வடவள்ளி, வேடப்பட்டி, வீரக்கேரளம், தெலுங்கு பாளையம், வேலாண்டிபாளையம், சாய்பாபா காலனி, செல்வபுரம், காந்தி நகர், அண்ணா நகர், லட்சுமி நகர்
கிணத்துக்கடவு துணை மின்நிலையம்:
சூலக்கல், தாமரைக்குளம், ஒத்தக்கால் மண்டபம் (ஒரு பகுதி), மன்றம்பாளையம், கொண்டம்பட்டி
SIDCO (குறிச்சி) துணை மின்நிலையம்:
சிட்கோ, சுந்தராபுரம் (ஒரு பகுதி), போத்தனூர் ( ஒரு பகுதி), எல்.ஐ.சி., காலனி, காமராஜ் நகர்
மேற்குறிப்பிட்ட பகுதிகள் அல்லாது கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படக்கூடும் என்பதை மக்கள் கவனத்தில் கொள்ளலாம்.
📢 இந்த தகவலை உங்களது சுற்றமும் தெரிந்தவர்களிடமும் பகிர்ந்து உதவிடுங்கள்