கோவை: பிரதமரை வரவேற்பதற்கு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
19ஆம் தேதி கோவை கொடிசியா வளாகத்தில் இயற்கை வேளாண்மை விவசாயிகள் மாநாட்டை பிரதமரும் மோடி துவக்கி வைக்கிறார். இதற்காக விமான மூலம் பிரதமர் மோடி கோவைக்கு வருகை புரிய உள்ளார்.

கோவை வரும் பிரதமர் மோடியே பாஜகவினர் உற்சாகமாக வரவேற்பதற்கு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். கோவை விமான நிலைய பகுதி, கொடிசியா வளாகம் செல்லும் சாலை என இரண்டு பகுதிகளிலும் சாலையின் இரு புறங்களிலும் நின்று பிரதமரை வரவேற்பதற்கு ஏற்பாடுகள் ஆனது செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சாலையின் இருப்புரங்களிலும் தடுப்புகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விமான நிலைய நுழைவாயிலில் இருந்து பிரதான சாலை வந்தடையும் வழி வரையிலும், கோவை அவிநாசி சாலை பிரதான சாலையில் இருந்து கொடிசியா வளாகத்திற்குள் செல்லும் சாலை வரையிலும் சாலையின் இரு புறங்களிலும் தடுப்புகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் இந்த பகுதி முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் ரோந்து வாகனங்கள் மூலம் தொடர்ந்து பணிகள் ஆனது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


