கோவை: அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம் செய்து வந்த ஈடுபட்ட பெண்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை சிவானந்தா காலனியை சேர்ந்த 26 வயது வாலிபர் ஒருவர் நேற்று வடவள்ளி ரோட்டில் நடந்து சென்று கொண்டு இருந்தார்.
அப்போது அவரிடம்பேச்சுக் கொடுத்த நபர் தடுத்து நிறுத்திய நபர் ஒருவர், அடுக்குமாடி குடியிருப்பில் அழகான பெண்கள் இருப்பதாகவும், பணம் கொடுத்தால் அவர்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த வாலிபர் பணம் எடுத்து வருவதாக கூறி அங்கிருந்து சென்றார். பின்னர் இதுகுறித்து வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விபசாரத்திற்கு அழைத்த அந்த நபரை மடக்கி பிடித்தனர். தொடர்ந்து குருசாமி நகரில் உள்ள அவர் கூறிய அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றனர்.
அங்கு பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபட்டது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அங்கிருந்த 2 பெண்களையும் பிடித்தனர். விசாரணையில் அவர்கள் பொம்மனாம்பாளையம் பகுதியை சேர்ந்த புரோக்கர் மூர்த்தி (40), வடள்ளியை சேர்ந்த 47 மற்றும் 44 வயது பெண்கள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிந்து கைது செய்து, சிறையில் அடைத்தனர்.





