கோவை: கோவை தனியார் ஓட்டலில் விபசாரம் செய்த 2 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
கோவையில் வீடு வாடகைக்கு எடுத்தும், மசாஜ் சென்டர் பெயரில் பாலியல் தொழில் நடைபெறுவதாக போலீசாருக்கு அடிக்கடி புகார் வருகின்றது.
போலீசார் ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று காளப்பட்டி நேரு நகரில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் இளம்பெண்களை வரவழைத்து விபசாரம் நடைபெறுவதாக பீளமேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், போலீசார் அங்கு சென்று விசாரித்தனர். அப்போது அங்கு, வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்து இளம்பெண்களை அழைத்து வந்து விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.
இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான விபசார புரோக்கர்கள் பிரகாஷ், குமார் ஆகியோரை தேடி வருகின்றனர்.