சுதந்திர தினத்தில் கோவையில் சுதந்திரமாக மது விற்பனை!

கோவை: சுதந்திர தினத்தில் கோவையில் சுதந்திரமாக மது விற்பனை செய்த 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாட்டின் 79வது சுதந்திர தினவிழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இதனை முன்னிட்டு மதுக்கடைகள் விடுமுறை விடப்பட்டிருந்தது. மது விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.

போலீசார் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுகிறதா? என கண்காணித்தனர். ரோந்து சென்று சோதனை செய்ததில், வெறைட்டிஹால் ரோடு, காட்டூர், போத்தனூர், பீளமேடு சரவணம்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் சிலர் மதுவை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

Advertisement

இதனையடுத்து போலீசார் மது விற்பனையில் ஈடுபட்ட 8 பேரை கைது செய்து 189 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

கோவையில் இதேபோல் பல்வேறு இடங்களில் மதுவிற்பனை சுதந்திரமாக நடைபெற்ற நிலையில், 8 பேரை மட்டும் போலீசார் கைது செய்து கணக்கு காட்டியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

பெண்ணை வன்புணர்ச்சி செய்த நபர்- கோவை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு…

கோவை: பெண்ணை வன்புணர்ச்சி செய்த நபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கோவையில் 28 வயது மதிக்கத்தக்க பெண்ணை வன்புணர்ச்சி செய்த வழக்கில் கைதான நபருக்கு 10 வருட சிறை தண்டனை என...

Latest News Coimbatore

Video

அன்னூர் பகுதியில் பிக்கப் வாகனம் மீது மோதிய பொலிரோ- பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் டாஸ்மாக் அருகே நின்று இருந்த பிக்கப் வேன் மீது அதிவேகமாக மோதிய பொலிரோ காரின் பதற வைக்கும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை, அன்னூரில் இருந்து சிறுமுகை செல்லும் சாலையில்...