கோவையில் வெவ்வேறு இடங்களில் வீட்டில் விபசாரம்; அழகிகள் மீட்பு!

கோவை: கோவையில் வெவ்வேறு இடங்களில் வீட்டில் விபசாரத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆர்.எஸ்.புரம் கிழக்கு ராமலிங்கம் சாலையில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் அங்கு சென்று ஒரு வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வீட்டில் பெண்களை வைத்து விபசாரம் நடப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபசார புரோக்கர்கள் புலியகுளம் கருப்பராயன் கோயில் வீதியை சேர்ந்த ஞானப்பிரகாசம் (44) மற்றும் ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த மகாமுனிஷா (34) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதேபோல், துடியலூர் போலீசார் கணேஷ் நகர் முதல் வீதியில் ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சோதனை செய்தனர்.

அதில் பெண்களை வைத்து விபசாரம் செய்வது உறுதியானது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து புரோக்கர்களான கணேஷ் நகரை சேர்ந்த மாரிராஜன் (35), பெரியநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த பாவனா (25) ஆகியோரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய தூத்துக்குடியைச் சேர்ந்த சரவணன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Recent News

ஜவுளித்துறையினருக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை அறிவித்த முதல்வர்…

கோவை: தமிழகத்தில் ஜவுளித்துறைக்காக இயந்திரங்களை கொள்முதல் செய்வதற்கு 20% மூலதன மானியம் வழங்கப்படும் என்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழ்நாடு அரசின் துணிநூல்துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து கோவை...

Video

Join WhatsApp