Header Top Ad
Header Top Ad

ஆணவ கொலைக்கு எதிராக தனிச்சட்டம் வேண்டும்- கோவையில் ஆர்ப்பாட்டம்

கோவை: கவின் ஆணவ கொலையை தொடர்ந்து திமுக உடனடியாக ஆணவ படுகொலை சட்டத்தை இயற்ற வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

நெல்லை மாவட்டத்தில் கவின் என்ற இளைஞர் ஆணவப்படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், தமிழக அரசு சாதி ஆணவ படுகொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தியும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அமைப்பு மற்றும் இயக்கங்களை சேர்ந்தவர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது சாதி ஆணவ படுகொலைக்கு தனிச்சட்டம் இயற்ற போவதாக தெரிவித்திருந்த நிலையில் தற்போது ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகள் ஆகியும் கூட தற்பொழுது வரை சட்டத்தை நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டினர். சாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர்.

குறிப்பாக தமிழகத்தில் தொடர்ச்சியாக சாதிய ஆணவ படுகொலை நடைபெற்று வருவதாகவும் அதற்கு தமிழக அரசாங்கம் உரிய தீர்வு எடுக்கு வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

Recent News