ட்ரம்ப்க்கு எதிராக கோவையில் வலுக்கும் ஆர்ப்பாட்டம்…

கோவை: ட்ரம்ப்க்கு எதிராக கோவையில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் வலுத்து வருகின்றன.

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்காவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவையில் DYFI, SFI, மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

அண்மையில் அமெரிக்க அரசு வெனிசுலா அதிபரான நிக்கோலஸ் மதுரோவை கைது செய்தனர். வெனிசுலாவில் இருந்து அதிகமான போதைப் பொருட்கள் அமெரிக்காவிற்கு அனுப்பப்படுவதாக குறிப்பிட்டு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெனிசுலா அதிபரை கைது செய்தார்.

இந்நிலையில் வெனிசுலாவின் இறையாண்மையை அமெரிக்கா மதிக்காமல் செயல்படுவதாகவும் வெனிசுலாவின் இயற்கை வளங்களை சுரண்டுவதற்காகவே ட்ரம்ப் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறி பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. ட்ரம்பின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனங்கள் வலுத்து வருகின்றது பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு DYFI, SFI, மாதர் சங்கம் சார்பில் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் நடவடிக்கையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் ட்ரம்பின் நடவடிக்கையை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். மேலும் ட்ரம்பின் முகமூடியை அணிந்து போராட்டம் மேற்கொண்டனர்.

இது குறித்து பேட்டியளித்த மாநில செயலாளர் கார்த்திக் போதைப் பொருளை குறிப்பிட்டு வெனிசுலா அதிபரை அமெரிக்காவின் அதிபர் ட்ரம்ப் கைது செய்கிறார் என்றால் முதலில் போதைப் பொருளுக்காக அமெரிக்கா அதிபர் ட்ரம்பை தான் கைது செய்ய வேண்டும் என தெரிவித்தார். கடந்த ஆண்டு போதையின் அளவு அதிகமாகி அதிகமான இளைஞர்கள் அமெரிக்காவில் தான் உயிரிழந்ததாகவும் குறிப்பிட்டார்.

Recent News

போத்தனூர் பகுதியில் புதிய டயாலிசிஸ் மையம்…

கோவை: கோவை போத்தனூர் பகுதியில் 98.70 லட்சம் மதிப்பில் புதிய டயாலிசிஸ் மையம் அமைய உள்ளது. கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மண்டலம் போத்தனூர் சத்திரம் வீதியில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.98.70 இலட்சம் மதிப்பீட்டில்...

Video

Join WhatsApp