பிஎஸ்ஜி மருத்துவமனையில் மனநல மருத்துவ கருத்தரங்கு… தமிழகம் முழுவதிலும் இருந்து மாணவர்கள் பங்கேற்பு…

கோவை: கோவையில் நடைபெற்று வரும் மனநல மருத்துவம் குறித்த கருத்தரங்கில் தமிழகம் முழுவதிலும் இருந்து நிபுணர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.

பீளமேடு பகுதியில் பிஎஸ்ஜி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையின் மனநல மருத்துவத்துறை மற்றும் கோயம்புத்தூர் சைக்காட்ரி சொசைட்டி சார்பில், மருத்துவ மாணவர்களுக்கான பயிற்சி கருத்தரங்கு இன்றும் நாளையும் நடைபெறுகிறது.

இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து 40க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மனநல மருத்துவத்துறைத் தலைவர் சையது உமர் தலைமையில் நடைபெறும் இந்த பயிற்சி கருத்தரங்கில் வெவ்வேறு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக்கல்லூரிகளைச் சேர்ந்த மனநல மருத்துவர்கள் கலந்துகொண்டு மாணவர்களிடையே உரையாற்றினர்.

psg hospitals psychaiatry conference

இதனைத் தொடர்ந்து, மாணவர்களுக்கான வினாடி வினா போட்டிகள் நடைபெற்றது. மார்ச் 15-ம் தேதி மாணவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகளும் சமர்ப்பிக்கப்படுகின்றன.

இதுகுறித்து பிஎஸ்ஜி மருத்துவமனை மனநல மருத்துவர் ஆனந்த் கூறுகையில்,

மருத்துவத்தில் முதுகலை படிக்கும் மாணவர்களுக்கான இந்த இரண்டு நாள் கருத்தரங்கை நடத்தி வருகிறோம். இதில் 10 தலைப்புகளின் கீழ் துறை நிபுணர்கள் உரையாற்றுகின்றனர்.

psg hospitals psychaiatry conference

வினாடி வினா மற்றும் ஆராய்ச்சி கட்டுரை சமர்ப்பிப்பு நிகழ்வுகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. இந்த கருத்தரங்கு மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும்.

இவ்வாறு ஆனந்த் கூறினார்.

PSG mental health seminar

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Breaking News: கோவையில் சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு திடீர் மயக்கம்!

கோவை கவுண்டம்பாளையம் அருகே மாநகராட்சி பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட பிறகு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதால் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Video

கோவை குறித்த ஆவணப்படம் வெளியீடு…

கோவை: கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் தயாரிக்கப்பட்ட காபி டேபிள் புத்தகம், மற்றும் ஆவணப்படம் வெளியிடப்பட்டது. பி.எஸ்.ஜி. ஐ.எம்.எஸ்.ஆர் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தயாரிக்கப்பட்ட காபி டேபிள்...