கோவை: கோவையில் புதிதாக அமைய உள்ள FL2 நவீன மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
திமுக ஆட்சிக்கு வந்ததும் படிபடியாக அரசு மதுக்கடைகளை அடைத்து முழு மதுவிலக்கு அமுல்படுத்தப்படும் என்று திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்த நிலையில் கோவை மாவட்டத்தில் 100 சதவிகிதம் கூடுதலாக FL2 என்ற நவீன மதுக்கடைகளை திறந்து வருகிறது.
அதன் ஒருபகுதியாக கோவை மதுக்கரை அரிசிபாளையம், மலும்பிச்சம்பட்டி சாலையில் புதிதாக FL2 நவீன மதுக்கடை அமைப்பதற்கான பணிகளை திமுக அரசு செய்து வருகிறது. அந்த பகுதியில் ஏற்கனவே இரண்டு டாஸ்மார்க் கடை உள்ளதால் மீண்டும் புதிதாக ஒரு மதுக்கடை அமைப்பதற்க்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் தற்பொழுது அமைய உள்ள கடையை சுற்றிலும் 7 க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இருப்பதாகவும், எற்கனவே இருக்கும் மதுக்கடைகளால் இங்கு பல்வேறு சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்பட்டு வருவதாகவும் கூறுகின்றனர்.
மேலும் தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகாரளித்த மக்கள், உடடனடியாக புதுதாக அமைய உள்ள மதுக்கடையை ரத்து செய்யாவிட்டால் பொதுமக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் தெரிவித்தனர்.