Header Top Ad
Header Top Ad

கோவை அரசு அலுவலகங்களில் தலைவர்களின் புகைப்படங்களை வைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

கோவை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் அரசாணைப்படி பெரியார், அண்ணாதுரை, அம்பேத்கர் ஆகியோர் புகைப்படங்களை வைக்க கோரி மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் பெரியார், அண்ணாதுரை , அம்பேத்கர் புகைப்படங்களை வைக்கக் கோரி மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் அரசு அலுவலகங்களில் புகைப்படங்கள் வைக்கப்படும் என அரசாணை வெளியீட்டும் தற்பொழுது வரை திமுக அரசு நிறைவேற்றவில்லை
என குற்றச்சாட்டு மேலும் புகைப்படங்களுடன் உள்ளே காவல்துறையினர் அனுமதிக்காததால் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் தலைவர் ஈஸ்வரன்:-

தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணைப்படி அனைத்து அரசு அலுவலங்களிலும் பெரியார், அண்ணாதுரை, அம்பேத்கர் புகைப்படங்களை வைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

அதேபோல அரசாங்கம் புகைப்படங்களை வைக்க விட்டால் மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகைப்படங்களை வைப்பதாகவும் தெரிவித்தனர்.தமிழ்நாடு அரசின் அரசாணையை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர்.

Advertisement

Recent News