கோவையில் கோர விபத்து; கணவன் கண் முன்னேயே மனைவி உயிரிழப்பு!

கோவை: கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் லாரி மோதிய விபத்தில் கணவன் கண் முன்னேயே மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கணபதி அருகே உள்ள உதயா நகரை சேர்ந்தவர் அசோக் ராஜ். இவரது மனைவி திவ்யா (வயது 42).

இவர்கள் இருவரும் நேற்று மதியம் வெளியில் சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். 

அவர்களது வாகனம் ஆர்.எஸ் .புரம் அருகே மேட்டுப்பாளையம் ரோட்டில் குஜராத் பவன் அருகில் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி மீது கணவன்-மனைவி சென்ற பைக் மோதியது.

இதில் கீழே விழுந்த திவ்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். அசோக் ராஜ் படுகாயமடைந்தார்.

அவரை மீட்ட பொதுமக்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பினர். அசோக் ராஜுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக கோவை போக்குவரத்து மேற்கு புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் அமுதா, லாரி டிரைவர் சூலூர் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

சாலை விபத்தில் கணவன் கண் முன்னே மனைவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Recent News

Video

Join WhatsApp