கவுண்டம்பாளையம் கொள்ளையர்களை சுட்டுப்பிடித்த போலீஸ்; உபி.,யிலிருந்து வந்து கைவரிசை!

கோவை: கவுண்டம்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள 13 வீடுகளின் வீட்டின் பூட்டை உடைத்து 56 பவுன் நகை, 3 கிலோ வெள்ளி, ரூ.3 லட்சம் உள்ளிட்டவை கொள்ளையடித்த 3 பேரை போலீசார் சுட்டு பிடித்தனர்.

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் 1848 வீடுகள் உள்ளன. இங்குள்ள வீடுகளில் அரசு அலுவலர்கள் வசிக்கின்றனர்.

Advertisement

இந்த நிலையில், இங்கு ஏ பிளாக்கில் உள்ள 3 வீடுகளிலும், சி(3) பிளாக்கில் 10 வீடுகளிலும் என மொத்தம் 13 வீடுகளில் திருட்டு சம்பவம் நடைபெற்றது. தகவலறிந்து வீடுகளின் உரிமையாளர்கள் அங்கு விரைந்தனர். மேலும், கவுண்டம்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர்.

இங்குள்ள குடியிருப்பில் வசிக்கும் நில எடுப்புப் பிரிவு வருவாய் அலுவலரின் வீட்டில் மட்டும் 30 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து, போலீஸார் நடத்திய விசாரணையில், 56 பவுன் தங்க நகைகள், ரூ.3 லட்சம், வெள்ளிப் பொருள்கள் ஆகியவை திருடப்பட்டது தெரியவந்துள்ளது.

சம்பவம் நடைபெற்ற வீடுகளில் மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் நேரில் சென்று விசாரணை நடத்தினார். மேலும், மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
இதுகுறித்து கவுண்டம்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இங்குள்ள குடியிருப்பில் சி பிளாக்கில் ஒரு வீட்டில் திருட்டு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து கவுண்டம்பாளையம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். தொடர்ந்து கொள்ளையர்களை பிடிக்க மூன்று தனிப்படை அமைத்து மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவிட்டார். மூன்று தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து போலீசார் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றினர். அதில் இரண்டு பேர் பேகுடன் செல்வது பதிவாகி இருந்தது. அதனை கைப்பற்றிய போலீசார் கொள்ளையர்களின் விவரங்களை சேகரித்தனர்.

இந்த நிலையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் குறித்து தகவல் கிடைத்தது. கொள்ளையர்கள் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை உறுதி செய்த போலீசார் அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது குறித்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது கொள்ளையர்கள் மதுக்கரை அடுத்த சுகுணாபுரம் குளத்துப்பாளையம் பகுதியில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.

போலீசார் இன்று அதிகாலை அங்கு சென்றனர். அப்போது ஒரு வீட்டில் கொள்ளையர்கள் பதுங்கி இருப்பது தெரியவந்தது. போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். அப்போது ஒரு வாலிபர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் போலீஸ்காரர் பார்த்திபன் வெட்டியுள்ளார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.

பின்னர் கொள்ளையர்கள் அரிவாளை காட்டி மிரட்டி அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர் .உடனே போலீசார் அவர்களை துரத்தி சென்றனர். அவர்கள் ஆயுதத்துடன் இருந்ததால் அவர்கள் மூவரையும் போலீசார் காலில் சுட்டு பிடித்தனர்.

பிடிபட்ட நபர்கள் வடமாநிலத்தைச் சேர்ந்த கொள்ளையர்கள் என்பது தெரிய வந்தது. காயம் அடைந்த அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக போலீசார் அனுமதித்துள்ளனர் . போலீசார் பிடிபட்ட நபர்களிடம் தீவிர விசாரணை நடத்தி நடத்தினர்.

அதில் வட மாநில கொள்ளையர்கள் இர்பான் (48), கல்லூ என்கிற கலில் (60), ஆசிக் (45) என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது தொடர்ந்து கொள்ளையர்களிடம் கோவை வடக்கு துணை கமிஷனர் தேவநாதன் விசாரணை நடத்தி வருகிறார். கோவையில் அடுத்தடுத்து அரசு அலுவலர்கள் வீடுகளில் கொள்ளையடித்த மூன்று பேரை போலீசார் சுட்டுப் பிடித்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recent News

சினிமா நடிகரின் கட்சியை முடித்து விட்ட தொகுதி கோவை தெற்கு தொகுதி- வானதி சீனிவாசன் பெருமிதம்…

கோவை: பெரிய சினிமா நடிகரை தோற்கடித்த தொகுதி தெற்கு தொகுதி என்று வானதி சீனிவாசன் பெருமிதம் கொண்டார். பாஜக வாக்குச் சாவடி முகவர்களுக்கான பயிலரங்கம் கோவை புளியகுளம் பகுதியில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில்...

Video

Join WhatsApp