Rain Alert: கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு சென்னை வானிலை மையம் மழை அலெர்ட் விடுத்துள்ளது.
கோவையில் இந்த வாரம் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
இதனிடையே இன்று புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஆகஸ்ட் 27, 28, 29 ஆகிய தேதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக 29ம் தேதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வேறு எந்த மாவட்டத்திற்கும் மழைக்கான அறிவிப்பு விடுக்கப்படவில்லை.
கோவை செய்திகள், அரசு, ரயில்வே மற்றும் மின்தடை அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈