கோவை: கோவையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
கோவையில் கடந்த வாரம் புறநகரை ஒட்டிய மலைப்பகுதியில் மழைப்பொழிவு இருந்தது. நகரில் ஒரு சில இடங்களில் மட்டுமே மழைப்பொழிவு காணப்பட்டது.
நேற்று கோவையில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், ஒரு சில இடங்களில் கனமழையும், பல்வேறு இடங்களில் மிதமான மழையும் இருந்தது.
Advertisement

நகரப் பகுதிகளில் போதிய மழை இல்லாததால் இன்று காலை முதலே புழுக்கம் காணப்பட்டது. இந்த சூழலில், கோவையின் பல்வேறு பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது.
துடியலூர், வடவள்ளி, கணுவாய், சிவானந்தா காலனி, சாய்பாபா காலனி, அவினாசி சாலை சுற்றுவட்டாரங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. சிங்காநல்லூர், சூலூர், மதுக்கரை, பேரூர் உள்ளிட்ட இடங்களில் வானம் கரு மேகங்கள் சூழ்ந்து காணப்படுகிறது. ஒரு சில பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது.
மழைப்பொழிவு இல்லாத பகுதிகளிலும் குளுகுளு சீதோஷன நிலை நிலவி வருகிறது.
உங்கள் பகுதியில் மழை உள்ளதா? என்பதை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள், மேலே குறிப்பிட்டுள்ள விவரத்துடன் இணைத்து கோவை மக்களுக்குத் தெரியப்படுத்துவோம்.