கோவை: வாடகை வீட்டில் பாலியல் தொழில் செய்த பெண் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சாயிபாபா காலனி காமராஜர் வீதியில் உள்ள ஒரு வீட்டில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்துவதாக நேற்று போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், நேற்று சாயிபாபா காலனி போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அதில், வீட்டை வாடகைக்கு எடுத்து பெண்களை வைத்து விபசாரம் நடத்தி வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் விபசார புரோக்கர் கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த கோவிந்தன் மகன் சுஷி(48) மற்றும் கர்நாடகா மாநிலம் கோலாரை சேர்ந்த தீபா(37) ஆகிய இருவரை கைது செய்தனர்.
பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தொடர்ந்து இது குறித்து சோதனைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.




