கோவையில் சோதனை சாவடியில் 30 லட்சம் ரூபாய் பறிமுதல்

கோவை: கோவை எட்டிமடை சோதனை சாவடியில் 30 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை- பாலக்காடு சாலை க.க.சாவடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, எட்டிமடை சிறப்பு சோதனை சாவடியில், போலிசார் வழக்கமான சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

Advertisement

அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை போலிசார் சோதனை மேற்கொண்ட போது, இருசக்கர வாகனத்தின் இருக்கைக்கு கீழ் 30 லட்சம் பணம் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. பணத்தை கைப்பற்றிய போலீசார்
விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கந்தே கவுண்டர் சாவடியைச் சேர்ந்த சுரேஷ்குமார் பணத்தை எடுத்து சென்றதும், Surya groups என்ற கம்பெனியில் இருந்து KMS engineering என்ற நிறுவனத்திற்கு பணத்தை கொண்டு செல்வதாகவும் , கட்டுமான பணிக்கு பொருட்கள் வாங்கியதற்காக பணம் கொண்டு செல்லப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் கைபற்றபட்ட பணத்திற்கான எந்தவிதமான ஆவணங்களும் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டு 30 லட்சம் பணம் மற்றும் பணத்தையும், பணத்தை கொண்டு வந்த சுரேஷ்குமார் என்பவரையும் வருமான வரிதுறை அதிகாரிகளிடம் போலிசார் ஒப்படைத்தனர்.

Recent News

Video

Join WhatsApp