Header Top Ad
Header Top Ad

வேலை வாங்கித் தருவதாகக் கூறி கோவையில் ரூ.31 லட்சம் மோசடி; சைபர் கிரைம் போலீஸ் விசாரணை !

கோவை: வேலை வாங்கித் தருவதாகவும், வணிகம் செய்து லாபம் தருவதாகவும் கூறி கோவையில் இருவரிடம் ரூ.31 லட்சம் மோசடி செய்தவர்கள் குறித்து சைபர் கிரைம் போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளது.

Advertisement

கோவை, இடையர்பாளையம் அருகிலுள்ள அன்பு நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது 40). இவர் கோவையில் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்தார்.

அதன் பிறகு அவர் புதிதாக வேலை வாய்ப்பு தேடி வந்தார்
இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சிவக்குமாரின் இமெயில் முகவரியை ஒரு நபர் தொடர்பு கொண்டார்.

Advertisement

அதில் தனது பெயர் தேவா ஸ்ரீ என்றும் வேலை வாய்ப்பு அலுவலகம் நடத்தி வருவதாகவும் கூறினார். சிவகுமாரின் வேலை வாய்ப்பு தேடும் விஷயத்தைத் தெரிந்து கொண்ட அவர் வெளிநாட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் மேலாளர் பதவிக்கு ஆள் தேவைப்படுவதாகக் கூறினார்.

மேலும் சிவகுமாரை அதற்கு விண்ணப்பிக்கும் படி அவர் கேட்டுக்கொண்டார்.
இதனால் மகிழ்ச்சி அடைந்த சிவகுமார் அவருக்குரிய வேலைக்கு விண்ணப்பம் செய்தார். அதன் பிறகு சிவக்குமாரிடம் அவர்கள் ஆன்லைன் மூலமாக நேர்முகத் தேர்வு நடத்தினர்.

அதன் பிறகு தேர்வில் சிவக்குமார் தேர்ச்சி பெற்று விட்டதாகவும் தொடர்ந்து விசா உள்ளிட்ட வெளிநாடு செல்வதற்கான வேலைகளைப் பார்க்க பணம் அனுப்பும்படியும் கேட்டு உள்ளனர்.

இதை நம்பிய சிவகுமார் அவர்கள் கூறிய வங்கிக் கணக்கிற்கு பல்வேறு தவணைகளில் ரூ.22 லட்சம் பணம் அனுப்பினார். ஆனால் அவர்கள் அதன் பிறகு சிவக்குமாரைத் தொடர்பு கொள்ளவில்லை.

சிவகுமார் பலமுறை தொடர்பு கொள்ள முயன்றும் அவர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதன் பிறகு தான் அந்த நிறுவனம் மோசடியான நிறுவனம் என்றும், அதில் பேசிய நபர் மோசடி ஆசாமி என்றும் சிவக்குமாருக்கு தெரிய வந்தது.

இதனால் ஏமாற்றம் அடைந்த அவர் கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் அருண் வழக்குப்பதிவு மோசடி நிறுவனம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

அதேபோன்று சரவணம்பட்டி அருகே உள்ள விசுவாசபுரம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (வயது 33) என்பவர் தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார்.

அப்போது இவரது வாட்ஸ்-ஆப் எண்ணிற்குத் தொடர்பு கொண்ட தனியார் செக்யூரிட்டி வேலை வாய்ப்பு நிறுவனம் சார்பில் பேசிய நபர் தங்களுடன் இணைந்து வணிகம் செய்தால் அதிக லாபம் பெறலாம் என கூறி உள்ளனர்.

இதை நம்பி அவர்கள் கூறியபடி பல்வேறு தவணைகளில் காத்து ரூ.9 லட்சத்து 20 ஆயிரம் பணம் அனுப்பினார். அதன் பிறகு அவர் தனது லாபத் தொகையை எடுக்க முயன்ற போது அவர்கள் மேலும் பணம் முதலீடு செய்யும்படி கூறியுள்ளனர்.

இதனால் ஏமாற்றம் அடைந்த கார்த்திக் அவர்கள் மோசடி ஆசாமிகள் என்பதைத் தெரிந்து அதிர்ச்சி அடைந்தார்.. இது குறித்து ஆன்லைன் மூலம் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இந்த புகார் குறித்தும் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Recent News