கோவை: கோவையில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ்., விழாவில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டார்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா மற்றும் 24 வது பேரூர் ஆதினம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் நூற்றாண்டு விழா பேரூர் ஆதீன மடத்தில் நடைபெற்றது.
இதில் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க, இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
தமிழில் மந்திரங்கள் ஓத, மோகன் பகவத் சிவலிங்க அபிஷேக வழிபாட்டில் ஈடுபட்டார். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடு நடைபெற்றன.
இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது சகோதரர் அன்பரசன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத்திற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முருகன் சிலையை பரிசாக வழங்கினார். நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் அன்பரசன் வேல் ஒன்றைப் பரிசாக வழங்கினார்.
இந்த நிகழ்வில், மோகன்பகவத் உரையாற்ற உள்ளார். நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.