கோவை: சபரிமலை சீசனை முன்னிட்டு போத்தனூர் வழியாக இரண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள ஊடக அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
சபரிமலை சீசனை முன்னிட்டு பயணிகளின் கூட்டம் அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே சார்பில் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் இருந்து கேரளா செல்லும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
ஆந்திர மாநிலம் நரசாபூரில் இருந்து கொல்லம் வரை ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படும்.
டிசம்பர் 27ம் தேதி மதியம் 1 மணிக்கு நரசாபூரில் இருந்து புறப்படும் இந்த ரயில் (எண்:07125), மறுநாள் இரவு கொல்லம் சென்றடையும். மறுமார்க்கத்தில் டிசம்பர் 29ம் தேதி அதிகாலை 2.30 மணிக்குக் கொல்லத்திலிருந்து இயக்கப்படும் இந்த ரயில் மறுநாள் இரவு நரசாபூர் சென்றடையும்.
அதேபோல் தெலங்கானா மாநிலம் சார்லபள்ளியில் இருந்து கொல்லம் வரை சிறப்பு ரயில் ஜனவரி 10 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். (வண்டி எண்:07127, 28) சேவை ஜனவரி 12 மற்றும் 19 தேதிகளில் நடைபெறும்.
இந்த சிறப்பு ரயில்கள் ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் நிறுத்தம் செய்யப்படும். ஏசி முதல் வகுப்பு, ஏசி 2 மற்றும் 3 அடுக்கு, ஸ்லீப்பர், பொதுப் பெட்டிகள் உள்ளிட்ட வசதிகள் கொண்டதாக இந்த ரயில்கள் இயக்கப்படுகின்றன.
சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் இந்த சிறப்பு ரயில் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை கோவை மற்றும் சுற்றுவட்டாரங்களில் வசிக்கும் ஐயப்ப பக்தர்களுக்கு பகிரவும்.

