கோவையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மை பணியாளர்கள் இன்று பேச்சுவார்த்தை- தீர்வு கிட்டுமா?

கோவை: கோவை மாவட்ட தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளரகள் பேச்சுவார்த்தை நடத்த திரண்டதால் போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டது…

கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம், மாவட்ட நிர்வாகம் அறிவித்த 770 ரூபாய் சம்பளம், தொழிலாளர்களிடம் மாதா மாதம் பிடித்தம் செய்யப்படும் PF உள்ளடங்கிய சம்பள ரசீதை வழங்குதல், ESI மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை உடனே வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

அதே சமயம் 3 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட வருபவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டனர். மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 9 வது நாளான இன்று கோவை மாவட்ட தொழிலாளர் நலத்துறை அலுவகத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தூய்மை பணியாளர்கள் பலரும் திரண்டனர். இதனால் அங்கு போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்றைய தின பேச்சுவார்த்தையில், அண்ணா சுகாதார பணியாளர் சங்கம், தமிழ்நாடு ஜனநாயக பொது தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு தூய்மை காவலர் பொது தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட ஆறு சங்கத்தை சார்ந்தவர்கள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

எஸ்.பி.வேலுமணியை புகழ்பாடிய நடிகை விந்தியா…

கோவை: கோவையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணியை நடிகை விந்தியா புகழ்ந்தார். கோவை, பேரூர், செட்டிபாளையம் பகுதியில் நடைபெற்ற அ.தி.மு.க-வின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் நட்சத்திரப் பேச்சாளரும், பிரபல நடிகையுமான விந்தியா,...

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.